முகநூல் பதிவுகள்

============================================================================================

கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் இயங்கும் அடுமனைகளில் (பேக்கேரி ) தயாரிக்கப்படும் வர்க்கி , பிஸ்கட் போன்ற தின்பண்டங்களில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்படுவதாகவும் , அது ஆரோக்கியம் அற்றது எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளபடுகிறது. இது உண்மையாகவே இருக்கலாம். ஏனெனில் உணவின் மிருது தன்மைக்கு மாட்டுகொழுப்பைவிட வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இந்த செய்தியின் ஊடாக வேறு ஒரு விடையத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விளைகிறேன். பெரும்பாலான உணவகங்கள் ,பேக்கேரிகள் மலையாளிகளான மேனன்கள் , ஈழுவாதியர் எனப்படும் இவர்களாலேயே நடத்தப்படுகிறது. சமீப காலமாக இந்து மதவெறி அமைப்புகளில் இவர்களின் ஆதிக்கம் கூடிவருவதை நீங்கள் நீலகிரி முழுவதும் காணமுடியும். இந்த இரு சாதிகளின் வரலாற்றை கொஞ்சம் உற்று நோக்கினால் … வைக்கம் என்கிற ஊரும் அதனோடு தந்தை பெரியாரும் , நாராயணகுருவும் உங்கள் நினைவுக்கு வருவார்கள். வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற இடத்தில் சோமநாதர் கோயிலை சுற்றி இருந்த நான்கு தெருக்களை குறிப்பாக ஈழுவா சாதியினர் பயன் படுத்த முடியாது . இந்த வீதியில் எந்த விலங்கினங்களும் போகலாம் . இவர்கள் நடக்க முடியாது. அதனை எதிர்த்து மக்களை திரட்டி போராடியவர் நாராயணகுரு. இவருடைய கொள்கைக்கும் தந்தை பெரியாரின் கொள்கைக்கும் வேறுபாடு இருப்பினும் தான் எதிர்த்து போராடும், அதே இந்துமதவெறி எதிர்ப்பாளரான தந்தை பெரியாரை ஸ்ரீநாராயணகுரு அழைத்தார்.உடனே அதற்கு அதற்கு ஆதரவளித்ததோடு தன் மனைவி நாகம்மாள் , சகோதரி கண்ணம்மாள் இருவரையும் கலந்து கொள்ளச்செய்து ஒரு வருடங்களுக்கு மேலான சிறை தண்டனையையும் அனுபவித்தார் தந்தை பெரியார் . தாழ்த்தப்பட்டவரை பார்த்தாலே தீட்டு , பெண்கள் மேலாடை அணிய தடை ; மார்பிற்கே வரி என இந்து மதத்தின் கொடுமைகள் சொல்லி மாளாதது. அதனை எதிர்கத்தான் நம் பெரியார் இங்கிருந்து அங்கு போய் போராடினார். அந்த போராட்டம் வெற்றி பெற துணை நின்றார். ஆனால் நமது மாவட்டத்தில் நடப்பது என்ன ….? எந்த இந்து மதம் தன்குல பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமையை மறுத்ததோ , எந்த மதம் தெருவில் நடக்க தடை விதித்ததோ, அதற்கு ஆதரவாக இங்கே பாதிக்கப்பட்ட மக்களே அமைப்பை கட்டுகிறார்கள். அது மட்டுமல்ல …தந்தை பெரியாரையும் இழிவுபடுத்துகிறார்கள். குறிப்பாக மலையாளிகளே இந்த அமைப்பின் முன்னணியாளர்களாக இருக்கிறார்கள். பெயரளவிற்கு ஓரிரு தமிழர். இதனை எப்படி நாம் எதிர்கொள்வது …? எந்த இடத்திற்கு புலம் பெயரவும் ,அங்கேயே வாழவும் எவர்க்கும் உரிமை உண்டு என்றபோதும் உலகமயசூழல் இன்னும் அதை விரைவு படுத்துகிறது. எல்லா மாநில மக்களும் ஏதோ ஒருவழியில் அதனால் பாதிக்கப்பட்டு வேற்று இடத்தில் குடியேறுகின்றனர். குடியேறுகிற இடத்தில் சக மக்களோடு மக்களாக , மத நல்லிணக்கத்தோடு வாழ்வதும் அந்த பகுதியின் சமூக அவலங்களுக்கு எதிராக , சமூக பொருளாதார கோரிக்கைகளுக்கு ஆதரவாக துணை நிற்ப்பதுவுமே நேர்மையான நடவடிக்கையாக இருக்கமுடியும். நம்மால் அன்போடு ‘ஏட்டா ‘ என்று அழைக்கப்பட்ட தேநீர் கடைகாரர் காலனி தேடி வருகிறார் இந்துமதவெறி அமைப்பை தொடங்க இன்று. உலகமயம் உருவாக்கும் உதிரிவர்க்கமும் அவர்களிடம் பெருகிவரும் சீரழிவு கலாச்சாரமும் நகர்முழுக்க குறிப்பாக, இளைஞர் களிடம் பரவிவருகிறது. இவர்களே இந்த ஓம் காளி ஜெய்காளி என்பதை நீங்கள் காணமுடியும். நான் இப்படி பேசுவதால் மற்றவர்களைப்போல குறுந்தேசிய இனவெறி கண்ணோட்டத்தில் யாரும் எண்ணவேண்டாம் . இதை கேரளத்தில் தமிழர்கள் செய்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். இப்போது விசயத்திற்கு வருகிறேன் இந்துமதத்தில் மாளாத பற்றுகொண்டுள்ள ‘ஏட்டா’ தான் செய்யும் வர்க்கியில் ஒருவேளை மாட்டுக்கொலுப்பு கலக்கவில்லை என்றே நாம் முடிவு செய்தாலும் …இந்துமதம் காக்க அவர்கள் இனிமேல் கோமாதாவினால் பயன்படுகிற கீழ்க்கண்ட பொருட்களை பயன்படுத்த கூடாது .சர்க்கரை நோய் மருந்து, பெல்ட் , ஹேண்ட் பேக் ,ஜான்சன் பேபி பவுடர் , சாக்கலேட் , ஐஸ்கிரீம் , பேட்டா செருப்பு ,யமகாவண்டி டயர் , மாருதி சீட்டின் கவர் ,லூபிரிகேன்ட் ஆயில் , டிட்டர்ஜென்ட் சோப் , செல்போன் கவர் , மாட்டுதோலினால் உருவான இசைக்கருவிகள் , மிருதங்கம் , ஜென்டைமேளம் ,……. இன்னும் உண்டு .
இதையெல்லாம் பயன்படுத்திகொண்டு ஏட்டாக்கள் நம்மிடம் கோமாதா மீது பாசம் காட்டினால் அது பச்சையான பிழைப்பு வாதம் ; அவர்கள் ஸ்ரீ நாராயணகுருவின் எதிராளிகள் ; மானமும் அறியும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன தந்தை பெரியாரை வைக்கத்தில் கைது செய்தவர்களின் வாரிசுகள் என்பதை உணர்வோம்.

—————————————————————————————————————————————

மனம் முழுதும் சாதிவெறி , இன்னொரு பக்கம் தமிழீழ தாயக கனவு ; என் தெரு பக்கம் நடக்கவோ , ஏன் உன் சாமிகூட வரகூடாது ; விளம்பர பிலெக்ஸ்ல எங்கள் சாதிவெறி தலைவர்களின் புகைப்படங்களையும் வச்சுக்குவோம் ,இன்னொரு பக்கம் ‘தேசிய தலைவர் ‘ படமும் வச்சுக்குவோம் . ஆதிக்க சாதிவெறியர்களின் இந்த ‘விடுதலை உணர்வையும்’ ‘தூய தமிழ் உணர்வையும்’ நாம் புரிந்து கொள்ளமுடிகிறது. தந்தை பெரியாரை நடப்பு நிலவர ‘ஆராய்ச்சிபடி ‘ அவர் வந்தேறியாகவோ இருக்கட்டும். வரலாற்றில் அவர் எதிர்கொள்ளாத அவதூறுகள் , அவமானங்கள் இவர்கள் யாரும் எதிர்கொள்ளாதது. தமிழீழ கனவு காண்கிற இருவர் உரிமையோடு “வாங்கண்ணா எங்க வீட்டுக்கு” என இவர் கூப்பிடவும் முடியாது. அவரும் இவர் வீட்டுக்கும் வரமாட்டார். மொழி , இனம் , நாடு விடுதலை இருக்கட்டும் சக மனிதர்கள் ஒரு விடையத்தை பேச , அன்னியோன்யமாக உறவுகொள்ள தடையாக இருக்கிற சாதி ,அதை கட்டிகாக்கிற பார்ப்பன இந்துமதம், இன்றைக்கு அதன் அடியாளாக மாறியிருக்கிற ஆதிக்க சாதிகளை பற்றியும் நாம் அறிவோம். ஆனால் எந்த சாதி , எந்த மதம் …தன்னை இன்றுவரை பிறப்பின் பெயரால், சாதியின் பெயரால் இழிவு படுத்துகிறதோ அதற்காக போராடிய ஒரு தலைவரை கருப்பு சட்டை போட்டுக்கொண்டு இவரே அவரை வந்தேறி என்று சொல்வாரானால் அவர் மொழியின் பெயரால் பிழைக்கவோ ,அல்லது அவர் பிறப்பில் கோளாறு எதுவும் இருக்ககூடும் என நம்புகிறேன்.

=========================================================================================

இந்த அறையில் குடியிருக்கும் தந்தை பெரியார்,அண்ணல அம்பேத்கர், ஆசான்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் கொடுத்த தைரியமும், உணர்வும் , தோழமைகள் கொடுத்த ஊக்கமும் பச்சை ரத்தம் ஆவணப்படம் எடுக்க வைத்தது. அதனை கண்டு இந்திய வருகையின்போது என்னைக் காண இலண்டனிலிருந்து நண்பர் ஜெய் நேற்றிலிருந்து எமது வீட்டில் இருக்கிறார். புத்தங்கங்களே உங்களோடு இவரை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி….

அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த்தின வாழ்த்துக்கள்!

———————————————————————————————————————————

எல்லோரும் கவிதை எழுதலாம்; எல்லோருக்கும் கவிதை வரும்; அதற்கு பயிற்சியும்,விடாபிடியான முயற்சியும், தொடர் வாசிப்பும் தேவை. எனக்கு அப்படித்தான் கவிதை வாய்த்தது . – கவிஞர் புவியரசு தகிதா விழாவில் பேசியது.
உண்மைதான் ஆனால், சில நண்பர்களை நாம் படைப்பை நோக்கி எவ்வளவுதான் அணுகினாலும் கவிஞர் என்னும் பட்டத்துடன் சுயதிருப்தி அடைந்து எழுதாமைக்கு என்னவெல்லாமோ காரணம் சொல்லி நழுவிவிடுகின்றனர். சீனாவில் ஓரு பழமொழி உண்டு வலிமை வாய்ந்த குதிரையை மல்லுக்கட்டி இழுத்து தொட்டியருகே கொண்டுபோய் விட்டாலும் அதுவாக கொள்ளு தின்றால் மட்டுமே உண்டு. ஆக …..
நாம் ஆகவேண்டியதை பார்ப்போம்!
சரிதானே நண்பர்களே.

============================================================================================

சீமான் ஓருபக்கம் தேர்தலை ‘போர் ‘ ங்கிறாரு; வைகோ இன்னொரு பக்கம் கட்சியிலிருந்து பிரிஞ்சுபோனா “ரோம்நகரம் பற்றியெறிகிறது லண்டன்ல குண்டு விழுது….ஜ வில் டேக் இட் ” ன்னு வரலாற்று சம்பவமெல்லாம் சொல்றாரு….
வருங்காலத்தில் தொண்டர்கள் கட்சியில் இணைவதேகூட ‘வரலாற்று திருப்புமுனை ‘ அப்படின்னு நாமெல்லாம் கேட்கவேண்டியிருக்குமோ???????????

———————————————————————————————————————————

பிள்ளையார் நமக்கு ‘அழுக்கு உருண்டையாக’ இருக்கலாம் பக்திமான்களுக்கு அவர் கடவுள் ; அதுபற்றி நமக்கு கவலையில்லை; அவர்கள் நம்பிக்கையாகவே இருக்கட்டும். ஆனால் களிமண் பிள்ளையார் ஆற்றில் கரைஞ்சிடுவார். ‘பிளாஸ்டாப் பேரிஸ்’ கரையமாட்டார். குடிக்கிற தண்ணியையும் இல்லாம பண்ணுவார். அதில் கரைக்காமல் இருப்பதே அறிவுபூர்வமான,மக்கள் நலன் சார்ந்த செயல். மீறி ஆற்றில் கரைப்பார்கள் என்றால் தங்கள் வீடுகளில் உள்ள சொந்த கிணற்றில் போடட்டும், அல்லது குழிவெட்டி புதைக்கட்டும். அல்லது தங்கள் செலவில் ஓரு குளம் வெட்டி சிவபெருமான் தலையிலிருந்து வரும் ஆற்றுநீரை திருப்பி நிரப்பி அதில் கரைக்கட்டும்.
சரிதானே நண்பர்களே!

பிளாஸ்டாப்பேரிஸ் பிள்ளையார் கரைப்பிற்கு தடைவிதித்த நீலகிரி மாவட்ட ஆட்சியரை பாராட்டுவோம்.

———————————————————————————————————————————

வாகனத்தில் நல்ல போதையில் ஓரு தேசபக்தன்: டேய் இங்கே நின்னு ஆடமுடியல இதை ஏண்டா இங்கே வச்சு எடத்தை அடச்சுக்கிட்டு…அதை எங்கெயாவது எறக்கி வைங்கடா.

இன்னொரு பக்தன்: டேய் இதை கரைக்கத்தாண்டா நாம வண்டில ஊர்வலம் போறோம்.
முதலாவன்: அப்பிடியா.

வினாயகருக்கு வந்த சோதனைய பாத்திங்களா…

==============================================================================================

நான் என் அம்மா காந்திமதிக்கும் அப்பா துரைசாமிக்கும் பிறந்தேன் என்பது என் குடும்பவரலாறு. இந்து மதச்சட்டத்தின்படி என்பிறப்பு ‘வேசிமகன்’ என சொல்லப்படுமானால் அதை எதிர்த்து மானமுள்ள மனிதனாக போராடுகிறேன். நீ போராடவில்லையானால் உன் குடும்பவரலாறு ஓருவேளை ‘அப்படியே’ இருக்கலாம்; நீ போராடமலும் இருக்கலாம் அது உம்பாடு. என்னை வேண்டாம்னு சொல்ற சொல்ற உரிமை எந்த பண்ணாடைக்கும் இல்லை. பகுத்தறிவும் இந்து மதத்தின் ஓரு பிரிவுங்கிறது உண்மைன்னா பொத்திக்கிட்டு யோசி.

—————————————————————————————————————————————————–

சிதைக்க பட்ட மலையகத்தமிழர்கள் – மு .சி .கந்தையா

வர்க்கப்பார்வையோடு ஓர் வரலாற்று தேடல்…

உண்மைகள் மிகவும் வலிமை வாய்ந்தவை, அதை சுற்றி எத்தனை புனைவுகளை மேற்கொண்டாலும் எத்தனை தூரம் அதை விலக்கி வைத்தாலும் அவைகள் ஏதோ வடிவத்தில் மீண்டும் மீண்டும் தங்கள் இருப்பிற்காக போராடி தன்னை நிலைநிறுத்தியே தீரும். அவைகள் அறிவியல் பூர்வமானவை . வரலாற்றில் பல விடயங்கள் குறிப்பிட்ட காலம் வரை கண்டுகொள்ள படாமல் இருக்கலாம் அது நீடிப்பதில்லை . சுமூகமான ஒரு முடிவிற்கு வருவதற்கு எந்த விடயம் தேவைஇல்லை என விலக்கி வைத்தோமோ பிற்காலத்தில் அதுவே முதன்மை பாத்திரம் வகித்திருப்பதை நாம் வரலாறுகள் தோறும் காணமுடியும். ஒரு தனி நபரின் , அல்லது ஒரு அமைப்பின் முடிவோ , அல்லது உண்மை விவரங்களிலிலிருந்து விடுபட்டு எடுக்கப்படும் முடிவுகளோ ஒரு நாளும் நீடித்திருப்பதில்லை . அகவிருப்பத்திலிலிருந்து எடுக்கப்பட்ட அந்த விடயங்கள் புறஉலகு கருத்துக்களுடன் மோதி தன் முடிவு தவறு என வருவதற்கு வேண்டுமானால் சில காலம் அது நீடிக்கலாம் , அவைகள் மறைந்துவிடாது .
விடுதலை என்பதை அதன் ஆழமான பொருளில் சொன்னால் உழைக்கும் மக்களின் விடுதலையையே குறிக்கும். இவர்களை கணக்கில் கொள்ளாத எந்த உரையாடலும் அபத்தமே. இரு நூறு ஆண்டுகாலமாக உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட ஒரு தேசிய இனத்தின் இலட்சகணக்கான மலையக மக்கள் ஏனைய இனங்களுக்கு உரிய அடையாளங்களற்று இருப்பதும், அதே மொழிபேசும் இன்னொரு பகுதி மக்களின் ஈழவிடுதலை உரத்து பேசப்படுவதும் என்னவென்று சொல்ல? அதுவும் தமிழகத்து மக்களுக்கு அதாவது பொதுபுத்திக்கு மலையக மக்கள் பிரச்சனை எட்டாத விடயமாக இருக்கலாம். அரசியலிலும் ஆயுதபோராட்டத்திலும் உலகின் கவனத்தை பெற்றுள்ள இலங்கை இனவிடுதலை போராட்டத்தில் மலையக மக்களின் சமூக பொருளாதார வாழ்கை பற்றிய அரசியல் நிலைபாட்டை இன்றுவரை எட்டமுடியாமல்

போனதற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கு இலங்கையில் பல்வேறான பதில்கள் இருக்கின்றன. மலையகம் ,ஈழவிடுதலை என்னும் இரு விடயங்களை எதிரெதிராக நிறுத்தி பார்க்கும் விமர்சனங்கள் ; மலையகம் ஒரு தேசிய இனமாக தனக்கான போராட்டத்தை முன்னெடுப்பது ; ஈழவிடுதலையுடன் மலையகத்தையும் உள்ளடக்கி பார்ப்பது; ஒரு வர்க்கபோராட்டத்தின் ஊடாக அனைவரும் விடுதலை பெறுவது என மலையகம் பற்றிய கருத்தாக்கங்கள் பலவாறு இருப்பினும் அண்மைகாலமாக மலையகம் பற்றிய உரையாடலும் , தேடலும் அதிகமாகி வருகிறது. ‘லயத்து வாழ்க்கை’யிலிருந்து விடுபட்டு சிந்திக்கும் ஓர் புதிய தலைமுறை தோட்டபகுதிகளில் அதிகமாகி வருவதை எல்லோரும் அவதானிக்க முடியும். நடந்து முடிந்த தேர்தலில் அவர்களின் பங்கு முக்கியமானது. நல்ல ஓர் ஆரோக்கிய போக்கு என சொல்லுகிற இந்த வேளையில் சரியான திசையை நோக்கி நாம் பயணிக்க ஓர் ஆரோக்கிய பூர்வமான வரலாற்று பார்வையும் அப்படிபட்ட பின்னணி கொண்ட ஆளுமைகளின் வழிகாட்டலும் தேவை என நினைக்கிறேன்.இல்லையெனில் நமது வேலை வெற்று உணர்ச்சி கூச்சலிலும் , அரசியல் உள்ளடக்கமற்ற வீண் விவாதங்களிலும் போய் முடியும்.
இலங்கையை பொறுத்தவரை முழுமையான தரவுகள் கொண்ட , விரிவான பார்வைகள் கொண்ட புத்தங்கங்கள் நிறைய வெளியிடப்பட்டுள்ளன. மலையகம் பற்றிய காத்திரமான வேலைகள் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்க பட்டுள்ளன எனபதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் சமீப காலமாக மலையகம் பற்றிய ஓர் ஆரோக்கி பூர்வமான வேலையை தொடங்கி அதை பொதுபுத்திக்கும் குறைந்த பட்சம் கொண்டு சென்றிருக்கிறோம் என்பதை மகிழ்வோடு சொல்லுகிற இந்த வேளையில் சிதைக்கப்பட்ட மலையகத்தமிழர்கள் என்கிற மு.சி கந்தையா அய்யாவின் நூல் மேலும் ஆவணமாக இருக்கும் என்பதை மகிழ்வோடு சர்வ தேச சமூகத்திற்கு சொல்லிக்கொள்கிறோம் .
இந்த நூலின் ஆசிரியர் இலங்கை ,தமிழகம் என்கிற இரண்டு நாடுகளிலும் மலையக மக்கள் தொடர்பான அரசியல் நகர்வுகளை தொடர்ந்து அவதானித்து வந்திருப்பதை நூல் முழுதும் காணமுடிகிறது . இலங்கை

வரலாற்றை 1817 முதல் 1970 வரையும், அதன் பின்னரும் உள்ள இலங்கை
வரலாற்றை மூன்று பகுதிகளாக தொகுப்பதோடு அந்த கால பின்னணியில் நடந்த அத்தனை அரசியல் சம்பவங்களையும் நினைவு கூறுகிறார். தொழிற்சங்கசெயற்பாடுகள் , தேசிய இனங்களின் பிரச்சனைகள் , தோட்ட அமைப்பு முறையின் செயற்பாடுகள் , பல்வேறு உடன்படிக்கைகள் அவற்றின் துரோகங்கள் , மலையக மக்கள் எவ்வாறெல்லாம் சிதறடிக்கபட்டனர் , மலையகத்தலைமையும் விடுதலை வேண்டி போராடிய தலைமைகளும் செய்ய தவறிய வேலைகள் , இந்தியாவிலும் இலங்கையிலும் மலையக மக்களின் இன்றைய நிலை என பல்வேறு தலைப்புகளில் தனது கருத்தை பல்வேறு தரவுகளுடன் பதிவு செய்துள்ளார் . மேலும் தற்போதைய சூழலில் மலையகம் தொடர்பான முன்னெடுப்புகளை விவரித்திருப்பதோடு , உரிமை கேட்டு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் பட்டியலையும் தொகுத்து தந்திருக்கிறார். உழைப்பை மட்டுமே அறிந்த மலையக மக்களை இரண்டு நாடுகளும் தனது வர்க்க நலனுக்காக எந்தெந்த வடிவங்களிலெல்லாம் ் வஞ்சித்தனர் என்பதற்கு இந்த நூலும் ஓர் ஆவணம்.

தவமுதல்வன் – ஆவணப்பட இயக்குனர். dmudhalvan@gmail.com

************************************************************************************************************************************************************

மலைப்பெண்!

போய் வருகிறேன் மலைகளே…


உங்களைப்போல ஏதோ
மலை எனக்கு காத்திருக்கும்

வெயிலுக்கு நிழல் தந்த ,
மழைச் சாரலுக்கு ஓதுங்கி நிற்க்க இடம் தந்த
ஒற்றை மரங்களே போய் வருகிறேன்…

உங்களைப்போலவே
அவைகள் ஏதோ ஓரு திசையில் என் வருகைக்கு காத்திருக்கும்.

உதிரத்தில் ஓன்றுகலக்க
ஓழுகும் வியர்வையை கழுவிவிட ,
மலைகளை அளந்த பாதங்களின் வெப்பம் தணிக்க நீர் தந்த ஒடைகளே, ஆறுகளே
போய் வருகிறேன் …

உங்களைப்போலவே
ஏதோ ஓரு மலை எனக்கான நீரை சுரந்துகொண்டிருக்கும்.

தேனீரை,உணவை, சுமக்கும் எடையை பங்கிட்ட என் சக நிரைத்தோழிகளே!

எடைகுறைவான – என் கூடைக்கு தங்கள் விரல்கிள்ளிய கொழுந்துகளால் சம்பளம் பதிப்பித்த அக்காமார்களே
போய்வருகிறேன்…

இலையின் பசுமையைவிட பச்சையாக உதிரும் கங்காணியின் சொற்களை
கேளியால் விரட்டிய மலையின் அனுபவங்களே
போய்வருகிறேன் ….

கைகூப்பி,கைபிடித்து
வழியனுப்பும் உங்கள் கரங்களில் காலம் பூசிய ‘கறை’மருதாணி நமக்கு ஓரே ரேகையை வரைந்துவிட்டது.

ஓன்றுமட்டும் சொல்வேன்
என்னிலிருந்து
உங்களிடமிருந்து
வெளிப்படும் விரல்களாவது அவர்களுக்கானதாகட்டும்!
அதிலாவது அவர்கள் ரேகைகளே நிலைக்கட்டும்.

போய்வருகிறேன்
மலைகளே
என் சக தோழிகளே…!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%