ஊடகம்

http://www.namathumalaiyagam.com interview with Malliyapoo santhi Thilakar

Makkal TV-Sangapalagai 17-07-11-Thavamuthalvan

Makkal TV-Sangapalagai 10-07-11-Thavamuthalvan

தலித்முரசு விமர்சனம்

தேயிலைத் தோட்டங்களை நினைக்கும்போதே அதன் பசுமையும், குளுமையும் மனதிற்குள் ஒரு சேர விரியும். கோடையில் குளிர் கொண்டிருக்கும் சுற்றுலா தலங்களாகவும், தமிழ்த் திரைப்படங்களின் கனவுப்பாடல்களுக்கான பேரழகு மலைகளாகவும்தான் தேயிலைத் தோட்டங்களை நாம் அறிவோம். ஆனால், நம் புத்துணர்ச்சியைத் தூண்டி, நண்பர்கள் சந்திப்பை இனிமையாக்குவதற்கும் மேலாக – தேயிலைத் தோட்டங்களைப் பற்றி நாம் பேசுவதற்கும், நினைப்பதற்கும் நிறைய இருக்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது, “பச்சை ரத்தம்’ என்ற ஆவணப்படம்.

pachai_ratham_400கொத்துக் கொத்தாக அடிமைகளாக வாங்கப்பட்டு, பிரபுக்களுக்கு விசுவாசமாக உழைத்து, ஆலைகளில் தொழிலாளர்களாக நசுங்கி, இன்று உழைப்பிற்கான கூலியை ஓரளவிற்காவது உரத்துக் கேட்கின்ற தொழிலாளர்களின் வரலாற்றில் – ஏமாற்றங்களுக்கும், இழப்புகளுக்கும் பஞ்சமேயிருக்காது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க் கையும் இதற்கு விதிவிலக்கல்ல. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் – நூற்றாண்டுகளுக்கும் மேலாக கூலி உயர்விற்காகவும், பணிப் பாதுகாப்பு கோரியும் போராடி வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலுக்காக இலங்கை சென்ற மக்கள், அங்கு காலூன்ற முயன்றபோது, மீண்டும் தமிழகத்திற்கே விரட்டியடிக்கப்பட்டனர். நிராதரவாக திரும்பிய மக்களை ஆதரித்து அரவணைத்திருக்க வேண்டிய தமிழக அரசு, அவர்கள் தலித்துகள் என்பதாலேயே அவர்களுடைய கோரிக்கைகளைப் புறந்தள்ளியதாக, வலுவான வாதத்தை முன் வைக்கிறது “பச்சை ரத்தம்’ படம். தமிழகத்திலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து தமிழகத்திற்குமாக அலைக்கழிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளிகளின் நெடுந்துயரப் பயணமும், வலிகளும் ஆவணப்படம் நெடுகிலும் கசிந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தியாவும், இலங்கையும் சுதந்திரம் பெற்றிராத 1840களில் தொடங்குகிறது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊசலாட்டம் மிகுந்த வாழ்க்கை. இலங்கைத் தீவை ஆண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள், மலைப் பகுதிகள் நிறைந்த அங்கு காபி பயிரிட விரும்பினர். கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்திலுள்ள இலங்கையின் மலைகள், காபி பயிரிடுவதற்கு உகந்த இடம் என்று உணர்ந்த பிரிட்டிஷ்காரர்கள் தீவை செம்மைப்படுத்த விழைந்தனர்.

இதற்காக, திருநெல்வேலி, மதுரை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், வடஆற்காடு போன்ற மாவட்டங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக ஆட்களை ஓட்டிச் சென்றனர் கங்காணிகள். பஞ்சத்தோடும், பட்டினியோடும் போராடிக் கொண்டிருந்த மக்களை இடம்பெயர்த்துவது, கங்காணிகளுக்கு எளிதான வேலையாக இருந்தது. அவ்வாறு கூட்டங்கூட்டமாக ராமேஸ்வரம் நோக்கி நடந்தே வந்தனர் மக்கள். இதற்கு “ஆள்கூட்டி வருதல்’ என்று பெயராம். அப்படி இலங்கைக்கு பயணப்பட்ட ஆதிலட்சுமி என்ற கப்பல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடலில் மூழ்கியதாகப் பதிவு செய்கிறது “பச்சை ரத்தம்’ படம்.

உயிரை ஏந்திக் கொண்டு கடல் கடந்த மக்களை, தீவில் நிறைந்திருந்த அடர் கானகம் வெகுவாகவே அச்சுறுத்தியது. காட்டைக் கடக்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் கடும் மழைக்கும், குளிருக்கும் பலியாகினர். 1841 ஆம் ஆண்டிலிருந்து, 1849 ஆம் ஆண்டு வரையில் இப்படி 70 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கிறது வரலாறு. பலியானவர்களை இழுத்துச் சென்று, விலங்குகள் தின்று தீர்த்தபின் எஞ்சியவை எலும்புகள். எலும்புகள் உடைந்து நிறைந்த அப்பாதையே சுண்ணாம்புப் பாதை என்றழைக்கப்பட்டதாகக் கூறுகிறது இப்படம்.

கடல், அடர் காடு என கடும் ஆபத்துகளையும் கடந்து கண்டியைச் சென்றடைந்த மக்கள், புதர் மண்டிக் கிடந்த இலங்கைத் தீவை செப்பனிடத் தொடங்கினர். உலகம் முழுவதை யும் சந்தைக் காடாகப் பார்க்கும் வெள்ளை வியாபாரிகளுக்கு, இலங்கைத் தீவை தங்கள் உழைப்பால் தங்கப் புதையலாக திருப்பிக் கொடுத்தனர் – தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளிகள்.

அதைத் தொடர்ந்து, 1881இல் 2 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கராக பரவியது காபி பயிரி. இலங்கையின் பொருளாதார ஏற்றத்திற்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்த இந்த காபி பயிர், நோய் தாக்குதலுக்குள்ளானதால் தேயிலையை பயிரிடத் தொடங்கினர் பிரிட்டிஷார். உழைப்பிற்கு சலிக்காத தொழிலாளர்களின் கரங்கள், பிரிட்டிஷாரின் விருப்பங்களை நிறைவேற்றியபடியே இருந்தன. அதன்படி, 1878இல் 4 ஆயிரத்து 700 ஏக்கராக இருந்த தேயிலைத் தோட்டங்கள், 1971 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 97 ஆயிரம் ஏக்கராக உயர்ந்தது. இலங்கைத் தீவிற்கு பெருமளவு அந்நிய செலாவணியையும், பொருளாதார ஏற்றத்தையும் பெற்றுத் தந்த தேயிலைத் தோட்டத்தின் பரப்பளவு விரிந்து கொண்டே சென்றது.

1911இல் 5 லட்சத்து 50 ஆயிரம் பேராக இருந்த தோட்டத் தொழிலாளர்கள், 1971இல் 11 லட்சத்து 74 ஆயிரம் பேராக உயர்ந்தனர். ஆனால், தோட்டத் தொழிலாளர் களின் கனவுகள் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்களின் நிலை மட்டும் உயரவே இல்லை. விளைவு, புலம்பெயர்ந்த மலையக மக்கள் தங்களின் உரிமையைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம் போலவே இங்கும் தொழிலாளர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டது. அவர்களின் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இனவெறியின் தொடக்கப்புள்ளி அப்போதே தொடங்கியது. உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாயினர் மலையக மக்கள். அவர்களின் குடியிருப்புகள் அந்நாளிலேயே முள்வேலியிட்டு முகாமிடப்பட்டிருந்தன. புதர் மண்டிக் கிடந்த காட்டு பூமியை, பயிர் விளையும் பூமியாக மாற்றித் தந்த மக்களை – பறத்தமிழர்கள், தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்று ஏளனப்படுத்தி மகிழ்ந்தது சிங்களப் பேரினவாதம். தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு விடியலும், பேரினவாதத்தின் கொடுமைகளை சுமந்து கொண்டே விடிந்தன.

1948 ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற டி.ஏ. சேனநாயக்கா முதல், 2011 ராஜபக்சே வரைக்கும் வந்த தலைவர்கள் தமிழர்களை கருவறுக்கவே முயல்கின்றனர் என்பது வரலாறு நமக்கு சொல்லும் பாடம். சுதந்திரத்திற்குப் பிறகு முதலில் ஆட்சியமைத்த சிங்கள அரசு, மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தது. அதன் பின்னர் அம்மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அடுத்த 1964 இல் வந்த சிறீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம், மலையக மக்களை மீண்டும் தமிழ் நாட்டிற்கே திருப்பி அனுப்பத் துணிந்தது. அடுத்து வந்த சட்டமும் மலையக மக்களை கட்டாயமாக நாடு கடத்தியது. உழைப்பிற்கு கூலி பெற்று, குழந்தைகளின் பசியமர்த்தி, வசிப்பதற்கு ஓர் இடம் தேடி என எளிய கனவுகளை சுமந்து கொண்டு, கடலிலும், காட்டிலும் பாதி உயிர்களை, உறவுகளை இழந்து, தீவில் இறங்கிய மக்களிடம் உயிர் சுண்டும் அளவிற்கு உழைப்பைப் பறித்துக் கொண்டு, அவர்களை சக்கையாய் திருப்பி அனுப்பத் தொடங்கினர் சிங்கள நாட்டின் தலைவர்கள். நடப்பதை நம்ப முடியாமல் திக்கித்து செயலிழந்தனர் மக்கள். 1974களில் தலைமன்னாருக்கு மலையக மக்களை கொண்டு வந்து சேர்த்த ரயில் பெட்டிகள் “அழுகைப் பூக்கள்’ என்று அழைக்கப்பட்டதாக விவரிக்கிறது “பச்சை ரத்தம்’ படம்.

சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை முன்வைத்தபோது, மலையக மக்களை இக்கட்டிலிருந்து காப்பாற்ற முடியாமல் தடுத்தது, தமிழ் தலைவர்களின் பிழைப்புவாதம். மலையக மக்களின் குடியுரிமை மறுக்கப்பட்டபோதும், வாக்குரிமை பறிக்கப்பட்டபோதும் வீரிய குரலெழுப்பாத தொண்டைமான், ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் சட்டப் பேரவையில் பெயருக்காக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அது பிரச்சனையில் வெந்து கொண்டிருந்த மக்களுக்கு முணுமுணுப்பாகக்கூட கேட்கவில்லை. மறுபுறமோ தொப்புள் கொடி உறவுகள் என்று சொந்தம் கொண்டாடும் ஈழத் தமிழர்கள்கூட, மலையக மக்களுக்கு ஆதர வுக்கரம் நீட்டவில்லை. மலையக மக்களுக்காக குரல் கொடுத்த பொதுவுடைமைக் கட்சி, நாளடைவில் சிங்கள வெறியின் கோர முகத்திற்கு முன்பு கூலிகேட்டும், உரிமைக் குரல் எழுப்பியும் குரலை அடக்கிக் கொண்டது.

இத்தகைய காயங்களை சுமந்து கொண்டு, இலங்கையிலிருந்து நிராதரவாகத் திரும்பிய தோட்டத் தொழிலாளர்களை ஆரத்தழுவி ஆதரித்திருக்க வேண்டும்தானே தமிழக அரசு? ஆனால் நிலைமை அப்படியிருக்கவில்லை. ஏற்கனவே பழக்கப்பட்ட தொழில் ஆதலால், வால்பாறை, தேனி, மேகமலை, மூணாறு, மாஞ்சோலை என தேயிலைத் தோட்டங்களை காட்டிவிட்டு தன் பணிக்குத் திரும்பின அரசு எந்திரங்கள். இலங்கையில் முள்வேலியிடப்பட்ட முகாம்களில், சேரிகளில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு, தமிழகத்தில் மாட்டுக் கொட்டகை யும், மண் வீடும் காத்திருந்தன. எதிர்த்து குரல் உயர்த்தினால், எட்டி உதைக்க ஆயிரம் கால்கள் நீண்டன. அன்று அடங்கிய குரல் இன்று வரை மலை முகடுகளுக்குள்ளாகவே எதிரொலித்து அடங்கி விடுகிறது. இதில் அரசு தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் நிலைமை, சற்றுத் தாழ்வில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

மற்ற தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கூலி உயர்வு இல்லை. பணிப் பாதுகாப்பு இல்லை. மாதக் கணக்கில் சம்பளம் கிடையாது. ஊசியாக இறங்கும் குளிரிலிருந்து தப்பிக்க குறைந்தபட்ச உடையோ, அட்டைக் கடிகளிலிருந்து தப்பிக்க காலணிகளோ இம்மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. வலிகளெல்லாம் இம்மக்கள்தம் இயல்பாக மாறிப்போனதுதான் மிச்சம். போதாத குறைக்கு ஒவ்வோர் ஆண்டும் வன விலங்குகளின் தாக்குதலுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பலியாகினர். வாழ்க்கையின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒதுங்க இடம் கிடைக்காத அவல நிலைக்கு தள்ளப்பட்டது, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு என அலைக்கழிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், வாழ்க்கையில் பெரும்பாடுகளை இருமுறை அனுபவித்தவர்கள் என்றுதான் கூற வேண்டும். ஆக, மனித இருப்பின் அடிப்படை இரண்டு நூற்றாண்டுகளாகியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என நெக்குருகிச் சொல்கிறது, “பச்சை ரத்தம்’ ஆவணப்படம்.

எண்ணற்ற பேட்டிகள், வலிமையான வசனங்கள், தொழிலாளர்களின் சோகத்தோடு பயணிக்கும் பின்னணி இசை ஆகியவை “பச்சை ரத்தம்’ படத்திற்கு வலு சேர்க்கின்றன. பொருந்தாத பின்னணிக் குரல், கூர்மையற்ற படத் தொகுப்பு என ஆவணப்படம் முழுக்க வறட்சி தென்பட்டாலும், தான் எடுத்துக் கொண்ட கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உண்மையான உழைப்பை கொட்டி யிருக்கிறார், ஆவணப்படத்தின் இயக்குநர் தவமுதல்வன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை ஒரு பாடமாகப் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த “பச்சை ரத்தம்’!

தமிழர் நட்பு கழகம் சார்பாக ‘பச்சை ரத்தம் ‘குறும்படம் திரையிடல் நிகழ்வு ,மும்பை தாராவியில் சண்டே ௦3/07/2011,மாலை,6 ..மணியளவில் நடக்கிறது ..
தோட்டத் தொழிலாளர்களின் இரு நூற்றாண்டுப் போராட்டம்
தேயிலைத் தோட்டங்களை நினைக்கும்போதே அதன் பசுமையும், குளுமையும் மனதிற்குள் ஒரு சேர விரியும். கோடையில் குளிர் கொண்டிருக்கும் சுற்றுலா தலங்களாகவும், தமிழ்த் திரைப்படங்களின் கனவுப்பாடல்களுக்கான பேரழகு மலைகளாகவும்தான் தேயிலைத் தோட்டங்களை நாம் அறிவோம்…. ஆனால், நம் புத்துணர்ச்சியைத் தூண்டி, நண்பர்கள் சந்திப்பை இனிமையாக்குவதற்கும் மேலாக – தேயிலைத் தோட்டங்களைப் பற்றி நாம் பேசுவதற்கும், நினைப்பதற்கும் நிறைய இருக்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது, “பச்சை ரத்தம்’ என்ற ஆவணப்படம்.ஆவணப்படத்தின் இயக்குநர் தவமுதல்வன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை ஒரு பாடமாகப் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த “பச்சை ரத்தம்’!

பச்சைரத்தம் ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் நேர்காணல்: யாழினி முனுசாமி – கி.நடராசன்

“சட்டமெல்லாம் அவர்களுக்கு வெறும் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்”

மிகுந்த சிரமத்திற்கிடையே தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி பச்சைரத்தம் என்கிற மிக முக்கியமான ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார் தவமுதல்வன. அந்த ஆவணப் படம் அவரை தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர்களின் வரிசையில் சேர்த்திருக்கிறது. அவருடன் ஒரு நேர்காணல்…
கே: பச்சை ரத்தத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
படத்தைப் பொறுத்தவரை பாராட்டுகளும் கசப்பான அனுபவங்களும் நிறையவே உள்ளன. உள்ளுரில் ஆகா ஒஹாவெனப் பாராட்டிவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். சமூக ஆர்வலர்கள், மக்கள் சேவர்கள், சிந்தனையாளர்கள் என்கிற பல பட்டங்களோடு உலவுகிறவர்கள், தொண்டு நிறுவனங்களையெல்லாம் இதன் தயாரிப்புப் பணிக்காகச் சந்தித்தேன். வெளியிடவும் கேட்டேன். அவர்களுக்கு புராஜக்ட் வேலைகள், மக்கள் நலப்பணிகள் (!) இருந்ததால் ஒத்துழைப்பு இல்லாததை உணர்ந்தேன்.
சாதாரண மக்களைப் பொறுத்தவரை படம் அவர்களின் வேதனையை உள்ளபடியே வெளிப்படுத்துவதாக உள்ளன்போடு தெரிவித்தனர். பல குடுப்பங்களில் படம் பார்த்து பழைய நினைவுகள் கிளர்ந்து அழுத்ததாகவும் நேரிலும் தொலைபேசியிலும் தெரிவித்தனர்.

கே: இந்தப் படத்தை எப்படித் திட்டமிட்டு எடுத்தீர்கள்?

படத்தில் வரும் எல்லா கருத்துக்களும் திட்டமிடப்பட்டு படப்பிடிப்பை நடத்தவில்லை. சிலவற்றை மட்டும் உறுதியாக தொகுத்துக் கொண்டேன்.

1. மலையக மக்களின் இலங்கை வரலாறு.
2. துரோக அரசியல் தலைமைகள்
3. இலங்கையிலும் தமிழகத்திலும் தேயிலைத் தோட்டப் பசுமைகளுக்குப் பின்னால் உறைந்திருக்கிற உழைப்பின் வரலாறு. ஊடகங்களில் காண்பிக்காத மக்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவது போன்றவைதான்.

பல காட்சிகள் படப்பிடிப்பு செல்லும் போதுதான் எடுக்க நேர்ந்தது.

கே: இந்த ஆவணப்படம் எடுக்கப்படுவதற்கான நோக்கம் என்ன?

படத்தின் மையமான கருத்து எதுவென்றால், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும் இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, உழைப்பாளிகளாக இருக்கிற.. தாயகம் திரும்பிய மக்களுக்கு ஒரு சராசரி மனிதனின் வாழ்வுகூட இன்றும் முழுமைபெறாமல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவது…இந்த வரலாறு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்குத் தெரியாமல் இருப்பது… அதை வெளிப்படுத்துவது.

கே: மலையகத் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கான காரணங்களாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

பூர்வீக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், பறைத் தமிழன் என்று சொல்லுவதற்கு முக்கிய காரணம், அவர்களிடையே ஊறிப்போயிருந்த சாதீயம்தான். மேலும் இங்கிருந்து போனவர்கள் பலர் வணிகர்களாக வளர்ந்தது… அவர்கள் நகர்ப்பகுதிகளில் குவிந்தது… இந்தியாதான் தன் உறவுக்கான மண் என நடந்து கொண்டது.. மலையகத்தவர்கள் பெரும்பாலும் தலித் மக்களாக இருந்தது போன்றவையெல்லாம் அம்மக்கள் வஞ்சிக்கப்படக் காரணமாக இருந்தது. குறிப்பாகச் சொன்னால், பூர்வீக இலங்கைத் தமிழர்களின் தலைவர்கள் ஓரிருவரைத் தவிர மலையகத் தமிழர்களை அந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்கிற புரிதலை விரிவாகப் பேசி அந்தக் கருத்தை நிலைபெறச் செய்ய முயற்சிக்கவில்லை. கண்டுகொள்ளாத இந்தப் போக்குதான் தொடர்ந்தது.

கே : இந்த ஆவணப்படம் உருவானவிதம் பற்றிச் சொல்லுங்கள்…?

முன் அனுபவம் என்பதெல்லாம் ஓரிரு குறும்படங்களில் வேலை செய்திருக்கிறேன். வீடியோ கிராபராக திருமண வீடுகளுக்கு நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கச் சென்றிருக்கிறேன். ஆனால் குறுப்படங்களை நிறைய பார்ப்பது… அது தொடர்பான புத்தகங்களைப் படிப்பது, சிறுகதைகளை எழுதுவது எனப் பணிகளைச் செய்து கொண்டிருந்தேன்.

இதில் முதன்மையான பங்களிப்பு என்றால்… ஒருவர் இப்படத்தின் இணை இயக்குநராகப் பணி செய்த G.M சண்முகராஜ் அவர்களைச் சொல்வேன். எழுத்திலும் கருத்திலும் தொகுப்பதிலும் என்னோடு இரண்டு வருடங்கள் தான் சார்ந்த திரைப்பட வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வுப்பூர்வமாக உழைத்தார். இன்னொருவர்… தொகுப்பாளர் திரு.செல்வா அவர்கள். படத்தின் மையக் கருத்துடன் ஒன்றிப்போய் பணமே வாங்கிங் கொள்ளாமல் பலமுறை படத்தொகுப்பை மாற்றியபோதும் எதுவும் சொல்லாமல் சரியான காட்சிகளைத் தொகுத்தும் அதற்கேற்ற இசையை சேர்த்தும் கொடுத்தார்.

படப்பிடிப்பைப் பொறுத்தவரை தனியொருவனாக நானே பெரும்பாலான காட்சிகளைப் படம் பிடித்துவிட்டேன்.

கே :  வரவேற்பும் அங்கிகாரமும் எப்படி இருக்கிறது..?

வரவேற்பைப் பொறுத்தவரை கருத்தாளர்களிடமும் எழுத்தாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை உணரமுடிகிறது. குறிப்பாக தோழர் அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், எஸ்.வி ராஜதுரை, அஜயன்பாலா, ஒளிப்பதிவாளர் செழியன், மலையக எழுத்தாளர் மு.நித்யானந்தம், தோழர் தியாகு போன்றோர் நல்ல கருத்துக்களைச் சொன்னார்கள்.

தமிழக அளவில் கும்பகோணம், தஞ்சை, கோவை போன்ற இடங்களில்  திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் பார்த்த பலர் இலங்கையில் மலையக மக்கள் பற்றிய செய்திகள் வியப்பாக உள்ளதாக  அன்றாடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். படத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு குறுந்தகடு வெளியிடும் திட்டம் உள்ளது. தற்பொழுது வெளியிட்ட குறுந்தகடுகளின் நிதி உரிய முறையில் வராத காரணத்தால் பெரும் கடன் சுமையில் உள்ளேன். கடன் தீர்ந்த்தும் ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டத்தில் உள்ளேன்.

எங்கள் ஊரைப்  பொறுந்தவரை (நீலகிரி) வரவேற்பு சாதாரண மக்களிடம்தான் உள்ளது. இவர்கள் மத்தியில் “சமூகப்பணி“ செய்வதாகச் சொல்லும் பலருக்கும் “படம் பார்க்கவே நேரமில்லை“. குறைந்த பட்சம் ஐந்து  குறுந்தகடுகளை வாங்கிக் கொள்ளக்கூட நிதியில்லை. அவர்கள் “புரோஜெக்ட்” வேலைகளில் மூழ்கியுள்ளார்கள். கட்சிகளில் உள்ள ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் வாக்குச் சீட்டு அரசியலின் பிழைப்புவாதத்தில் உள்ளனர். இலங்கையில் மலையகத் தலைவர்கள் சிலர் செய்த அதே கருங்காலி வேலையை இந்த மக்களைக் கொண்டு பிழைப்பு நடத்தும், வாக்கு வங்கி இருப்பதாக பேரம்பேசி கட்சிகளிடம் பணம் வாங்குவது எனத்தொடர்கிறது அவர்கள் “சமூகப்பணி” . எனவே அவர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. தொழிற்சாலைகளில், தேயிலைத் தோட்டங்களிலும் தொழிற்சங்கப் பணிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதற்கு மேற் சொன்னவைகள் காரணமாக உள்ளன. கட்சிகளுக்கும் சின்னங்களுக்கும் கொடுக்கும் மரியாதை தொழிற்சங்கப்பணிகளுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. சில தேயிலைக் தோட்டங்களில் முதலாளிகளே நடத்தும் பெயரளவிற்கான தொழிற்சங்கங்கள் உள்ளன.
மற்ற தொழிலாளர்கள் வீட்டைச் சொந்தமாக வைத்துக் கொண்டு நிறுவனங்களில் வேலை செய்து உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். தேயிலைத் தோட்டங்களில் வீடே அவர்களுகளுடையது. முதலாளகளின் வீட்டிலிந்துகொண்டு உரிமைபேச  யாருக்குத் துணிவு வரும்? வீட்டை காலி செய்யும் நினைப்புதான் முதலில் வரும் உரிமை பற்றிப் பேசினால்.

கே : நில உச்சவரம்புச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதே…அது அங்கு நடைமுறையில் இருக்கிறதா?

நில உச்சவரம்புச் சட்டத்தை டாட்டா, பிர்லாக்களுக்கு யார் நடைமுறைப் படுத்தச் சொல்வது….? அவர்களைப் போல ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட தேயிலை நிறுவனங்கள் இங்கே பல உள்ளன. புறம்போக்கு நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் எல்லாம் தோட்டங்களாக மாறியுள்ளன.

நில உச்சவரம்புச் சட்டம் நிலங்களை அவர்கள் பிரித்துக் கொண்டு தன் குடும்ப சொந்தக்காரர்களின் பெயரில் எழுதிக் கொள்வதற்குத்தான் பயன்பட்டிருக்கிறது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சத்தமின்றி எதையும் பட்டா பதியலாம்… தோட்டமாக்கலாம்.

தொழிலாளிகளாக உள்ள தாயகம் திரும்பிய மக்கள் தான் குடியிருக்க 10* 10 என ஒரு இடத்தில் குடிசை போட்டால்தான் போலீஸ் வருகிறது. அரசு அதிகாரிகள் வருகிறார்கள். வனத்துறை வருகிறது. சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.  பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை சட்டமெல்லாம் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்.

கே : உங்களது பச்சை ரத்தம் அரசாங்கத்தின் கவனம் பெற்றிருப்பதாக உணர்கிறீர்களா?

ஆமாம். தற்போதைய அ.இ.அ.திமுக. அரசு கடந்த சட்டசபை விவாதத்தில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. திராவிடமணி (தி.மு.க) தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது பற்றிப் பேசியுள்ளார்.

யானை அடித்து இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக இதுவரை 25,000 கொடுக்கப்பட்டது. தற்பொழுது 2,50,000 (இரண்டரை லட்சம்) ரூபாயாக முதல்வர் அவர்கள் கொடுத்துள்ளார்கள். ஏதோ ஒருவகையில் இதை என் ஆவணப் படத்திற்கான எதிர்வினையாகக் கருதுகிறேன்.

கே : நீலகிரியில் வாழும் தாயகம் திரும்பிய மக்களைப் பற்றிய தங்கள் மதிப்பீடு?

நல்ல உழைப்பாளிகள். தொட்டால் துலங்கும் கரங்களுக்குச் சொந்தக் காரர்கள். படத்தில் சொல்லியிருப்பதுபோல இவர்களின்றி தேயிலைத் தோட்டங்களில் பசுமையில்லை.
ஆனால் காலம் காலமாகக் கல்வியறிவு இல்லாத காரணத்தால் நிலப்பிரபுத்துவ அமைப்பில் வாழ்ந்து பழகியதால் அதே அடிமை மனோபாவம்தான் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இம் மாவட்டம் முழுவதும் சுமார் 400 – க்கு மேற்பட்ட இடங்களில் காலனிகளை வாழ்கிறார்கள். பெரும்பாலான வீடுகளுக்குப் பட்டா இல்லை. போக்குவரத்து வசதி இல்லை. முறையான கல்விக்கூடங்கள் இல்லை. மருத்துவம் இல்லை. இதைப் பற்றிய கவலை அவர்களிடம் விழிப்புணர்வாக வெளிப்படுவதில்லை. ஊருக்கு ஊர் கோயில் கட்டுவது. அதற்கு வரி வசூலிப்பது.   அது தொடர்பான சண்டை சச்சரவுகள். பிறகு சபரிமலைக்கு ஆண்கள். மேல்மருவத்தூருக்கு பெண்கள் எனக் கோயில்களுக்கு பண்டிகைகளுக்குச் செலவு செய்தது போக மீதி மருத்துவமனைகளுக்குப் போய்விடுகிறது.

குடியிருக்க வீடில்லாதபோதும் கோயில் பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். புதிதாக வருகிற இளைஞர்களும் பெரும்பாலும் அதைநோக்கியே செல்வது வருத்தமளிக்கிறது. எனவே கல்வி அடிப்படையான விசயமாகவும் நல்ல தலைமைகளும் தேவைப்படுகிறது.

கே : இலங்கையிலுள்ள மலையக மக்களைப் பற்றி…

இனம், வர்க்கம், சாதி என்கிற மூன்று அடையாளங்களால் இம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. சாதியில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பால் தொழிலாளிகளாகவும் இருப்பதால்தான் இவர்கள் ஈழத் தமிழர்களைப்போல் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து போக முடியவில்லை. அவர்களைப்  பற்றிப் பேசவும்  பெரிய ஆட்களில்லை. மு. நித்யானந்தம், தெளிவத்தை, மாத்தனை சோமு போன்றவர்களைத் தவிர. ஈழப்பிச்சினையைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கு இவர்களைப் பற்றிப் பேசுவதால் எந்தப் பயன்பாடுகூட இருக்கப் போவதில்லை. எனவே பேசவில்லை. இங்கு அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், தியாகு, எஸ்.வி. ஆர்., சி.மகேந்திரன் போன்றவர்கள்தான் சிறப்பான பதிவுகளை தந்துள்ளனர்.

கே : உங்களது தனிப்பட்ட அனுபவம்….?

வேதனையானதுதான் என்றாலும் இதனால் ஏற்பட்ட கடன் சுமை பற்றியோ இதன் தயாரிப்பாளர் தனலெட்சுமி (என்மனைவி) கொழுந்து கிள்ளிய பணத்தில்தான் இப்படம் தயாரிக்க முடிந்தது என்பது பற்றியோ எனக்குக் கவலையில்லை. ஈழப் பிரச்சினையில் வாய்கிழிய வீராவேசமாகப் பேசுகிற பலருக்கு ஈழத்தின் பிரச்சினை பற்றிய முழுமையான வரலாற்றுப் பார்வையோ, மலையக மக்கள், பூர்வீக இலங்கைத் தமிழர்கள் பற்றிய புரிதலோ இல்லை. தொப்புள்கொடி உறவான மலையகத் தமிழர்கள் மட்டும் மறந்துவிடுகிறது அல்லது தெரியவில்லை. அவர்களுடைய தேடல் எல்லாம் “அண்ணன் வருவார்” … “அண்ணன் பார்த்துக் கொள்வார்”  …   “அவர் இருக்கிறா…?இல்லையா?” என்பதுதான்.
மனம் திறந்த விமர்சனங்களோ உரையாடல்களோ அதற்காக உணர்வாளர்களைப் பயிற்துவிப்பதோ பெரும்பாலான முன்னணியாளர்களிடம் இல்லை. இவர்கள் பின்னால் திரள்கிற உண்மையிலேயே உணர்வாளர்கள் பலர் வேதனையுடன் இருப்பதைக் காண முடிகிறது. இந்தப் போக்கு அவர்களை எதிர்காலத்தில் எதிலும் நம்பிக்கையற்றவர்களாகத்தான்  உருவாக்கும்.

கே : முள்ளிவாய்க்கால் படுகொலையின் பாதிப்பு இப்படத்தில் எதிரொலிக்கிறதா?

முள்ளிவாய்க்கால் படுகொலையின் பாதிப்பு படத்தில் இல்லை. ஆனால் கடைசிக்கட்ட போரில் இறந்துபோனவர்கள்… இப்போது முள்வேலிகளுக்குப் பின்னால் இருப்பது பெரும்பாலும் மலையகத் தமிழர்கள் என்பதை எழுத்தால் மட்டுமே என்னால் பதிவு செய்ய முடிந்தது.

கே : குறிப்பிடும்படியான விமர்சனங்கள்…..?

பலர் தயக்கத்துடன் இது இப்போது தேவையில்லை என்றனர். ஆனால் பேசப்பட வேண்டியது என்றனர். ஈழவிடுதலைக்கு எதிரானவர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக்க் கூறினர். அதற்காக இதைப் பேசாமல் இருக்க முடியாது. அப்போது பேசமுடியவில்லை. விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் இப்போதும் பேசத் தயங்கினால் அதைவிட அபத்தம் வேறெதுவுமில்லை எனக்கூறினேன்.
விடுதலை என்பது மக்களுக்கானது. குறிப்பாக உழைக்கும் மக்களுக்கானது…… அதில் மலையக மக்களைப் பற்றிப் பேசாமல் இனிமேலும் மௌனம் சாதிப்பது இங்கே உள்ள தலைவர்களை சந்தேகப்படவைக்கும்.

கே : இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

சிலருக்குத் தனிப்பட்ட முறையில்  நன்றிகள் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். இப்போதும் கொழுந்து கிள்ளி கடன்கட்டும் என் மனைவி… படத்தில் பின்னணிக்குரல் கொடுத்ததோடு நிதிக்காகவும் பலரிடம் சென்று நிதி திரட்டி முழு ஒத்துழைப்பையும் கொடுத்த விழுப்புரம் கவிஞர் ராமமூர்த்தி, கேமிரா கொடுத்து உதவிய புகைப்படக் கலைஞர் திரு. ஹரிசாந்தன், கவிஞர் யாழ்மதி போன்றோர்கள் எனது நன்றிக்குரியவர்கள்

தோட்டத் தொழிலாளர்களின் இரு நூற்றாண்டுப் போராட்டம்

இளமதி வியாழன், 02 ஜூன் 2011 11:30
மின்னஞ்சல் அச்சிடுக PDF

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த

தேயிலைத் தோட்டங்களை நினைக்கும்போதே அதன் பசுமையும், குளுமையும் மனதிற்குள் ஒரு சேர விரியும். கோடையில் குளிர் கொண்டிருக்கும் சுற்றுலா தலங்களாகவும், தமிழ்த் திரைப்படங்களின் கனவுப்பாடல்களுக்கான பேரழகு மலைகளாகவும்தான் தேயிலைத் தோட்டங்களை நாம் அறிவோம். ஆனால், நம் புத்துணர்ச்சியைத் தூண்டி, நண்பர்கள் சந்திப்பை இனிமையாக்குவதற்கும் மேலாக – தேயிலைத் தோட்டங்களைப் பற்றி நாம் பேசுவதற்கும், நினைப்பதற்கும் நிறைய இருக்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது, “பச்சை ரத்தம்’ என்ற ஆவணப்படம்.

pachai_ratham_400கொத்துக் கொத்தாக அடிமைகளாக வாங்கப்பட்டு, பிரபுக்களுக்கு விசுவாசமாக உழைத்து, ஆலைகளில் தொழிலாளர்களாக நசுங்கி, இன்று உழைப்பிற்கான கூலியை ஓரளவிற்காவது உரத்துக் கேட்கின்ற தொழிலாளர்களின் வரலாற்றில் – ஏமாற்றங்களுக்கும், இழப்புகளுக்கும் பஞ்சமேயிருக்காது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க் கையும் இதற்கு விதிவிலக்கல்ல. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் – நூற்றாண்டுகளுக்கும் மேலாக கூலி உயர்விற்காகவும், பணிப் பாதுகாப்பு கோரியும் போராடி வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலுக்காக இலங்கை சென்ற மக்கள், அங்கு காலூன்ற முயன்றபோது, மீண்டும் தமிழகத்திற்கே விரட்டியடிக்கப்பட்டனர். நிராதரவாக திரும்பிய மக்களை ஆதரித்து அரவணைத்திருக்க வேண்டிய தமிழக அரசு, அவர்கள் தலித்துகள் என்பதாலேயே அவர்களுடைய கோரிக்கைகளைப் புறந்தள்ளியதாக, வலுவான வாதத்தை முன் வைக்கிறது “பச்சை ரத்தம்’ படம். தமிழகத்திலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து தமிழகத்திற்குமாக அலைக்கழிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளிகளின் நெடுந்துயரப் பயணமும், வலிகளும் ஆவணப்படம் நெடுகிலும் கசிந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தியாவும், இலங்கையும் சுதந்திரம் பெற்றிராத 1840களில் தொடங்குகிறது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊசலாட்டம் மிகுந்த வாழ்க்கை. இலங்கைத் தீவை ஆண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள், மலைப் பகுதிகள் நிறைந்த அங்கு காபி பயிரிட விரும்பினர். கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்திலுள்ள இலங்கையின் மலைகள், காபி பயிரிடுவதற்கு உகந்த இடம் என்று உணர்ந்த பிரிட்டிஷ்காரர்கள் தீவை செம்மைப்படுத்த விழைந்தனர்.

இதற்காக, திருநெல்வேலி, மதுரை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், வடஆற்காடு போன்ற மாவட்டங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக ஆட்களை ஓட்டிச் சென்றனர் கங்காணிகள். பஞ்சத்தோடும், பட்டினியோடும் போராடிக் கொண்டிருந்த மக்களை இடம்பெயர்த்துவது, கங்காணிகளுக்கு எளிதான வேலையாக இருந்தது. அவ்வாறு கூட்டங்கூட்டமாக ராமேஸ்வரம் நோக்கி நடந்தே வந்தனர் மக்கள். இதற்கு “ஆள்கூட்டி வருதல்’ என்று பெயராம். அப்படி இலங்கைக்கு பயணப்பட்ட ஆதிலட்சுமி என்ற கப்பல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடலில் மூழ்கியதாகப் பதிவு செய்கிறது “பச்சை ரத்தம்’ படம்.

உயிரை ஏந்திக் கொண்டு கடல் கடந்த மக்களை, தீவில் நிறைந்திருந்த அடர் கானகம் வெகுவாகவே அச்சுறுத்தியது. காட்டைக் கடக்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் கடும் மழைக்கும், குளிருக்கும் பலியாகினர். 1841 ஆம் ஆண்டிலிருந்து, 1849 ஆம் ஆண்டு வரையில் இப்படி 70 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கிறது வரலாறு. பலியானவர்களை இழுத்துச் சென்று, விலங்குகள் தின்று தீர்த்தபின் எஞ்சியவை எலும்புகள். எலும்புகள் உடைந்து நிறைந்த அப்பாதையே சுண்ணாம்புப் பாதை என்றழைக்கப்பட்டதாகக் கூறுகிறது இப்படம்.

கடல், அடர் காடு என கடும் ஆபத்துகளையும் கடந்து கண்டியைச் சென்றடைந்த மக்கள், புதர் மண்டிக் கிடந்த இலங்கைத் தீவை செப்பனிடத் தொடங்கினர். உலகம் முழுவதை யும் சந்தைக் காடாகப் பார்க்கும் வெள்ளை வியாபாரிகளுக்கு, இலங்கைத் தீவை தங்கள் உழைப்பால் தங்கப் புதையலாக திருப்பிக் கொடுத்தனர் – தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளிகள்.

அதைத் தொடர்ந்து, 1881இல் 2 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கராக பரவியது காபி பயிரி. இலங்கையின் பொருளாதார ஏற்றத்திற்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்த இந்த காபி பயிர், நோய் தாக்குதலுக்குள்ளானதால் தேயிலையை பயிரிடத் தொடங்கினர் பிரிட்டிஷார். உழைப்பிற்கு சலிக்காத தொழிலாளர்களின் கரங்கள், பிரிட்டிஷாரின் விருப்பங்களை நிறைவேற்றியபடியே இருந்தன. அதன்படி, 1878இல் 4 ஆயிரத்து 700 ஏக்கராக இருந்த தேயிலைத் தோட்டங்கள், 1971 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 97 ஆயிரம் ஏக்கராக உயர்ந்தது. இலங்கைத் தீவிற்கு பெருமளவு அந்நிய செலாவணியையும், பொருளாதார ஏற்றத்தையும் பெற்றுத் தந்த தேயிலைத் தோட்டத்தின் பரப்பளவு விரிந்து கொண்டே சென்றது.

1911இல் 5 லட்சத்து 50 ஆயிரம் பேராக இருந்த தோட்டத் தொழிலாளர்கள், 1971இல் 11 லட்சத்து 74 ஆயிரம் பேராக உயர்ந்தனர். ஆனால், தோட்டத் தொழிலாளர் களின் கனவுகள் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்களின் நிலை மட்டும் உயரவே இல்லை. விளைவு, புலம்பெயர்ந்த மலையக மக்கள் தங்களின் உரிமையைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம் போலவே இங்கும் தொழிலாளர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டது. அவர்களின் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இனவெறியின் தொடக்கப்புள்ளி அப்போதே தொடங்கியது. உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாயினர் மலையக மக்கள். அவர்களின் குடியிருப்புகள் அந்நாளிலேயே முள்வேலியிட்டு முகாமிடப்பட்டிருந்தன. புதர் மண்டிக் கிடந்த காட்டு பூமியை, பயிர் விளையும் பூமியாக மாற்றித் தந்த மக்களை – பறத்தமிழர்கள், தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்று ஏளனப்படுத்தி மகிழ்ந்தது சிங்களப் பேரினவாதம். தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு விடியலும், பேரினவாதத்தின் கொடுமைகளை சுமந்து கொண்டே விடிந்தன.

1948 ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற டி.ஏ. சேனநாயக்கா முதல், 2011 ராஜபக்சே வரைக்கும் வந்த தலைவர்கள் தமிழர்களை கருவறுக்கவே முயல்கின்றனர் என்பது வரலாறு நமக்கு சொல்லும் பாடம். சுதந்திரத்திற்குப் பிறகு முதலில் ஆட்சியமைத்த சிங்கள அரசு, மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தது. அதன் பின்னர் அம்மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அடுத்த 1964 இல் வந்த சிறீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம், மலையக மக்களை மீண்டும் தமிழ் நாட்டிற்கே திருப்பி அனுப்பத் துணிந்தது. அடுத்து வந்த சட்டமும் மலையக மக்களை கட்டாயமாக நாடு கடத்தியது. உழைப்பிற்கு கூலி பெற்று, குழந்தைகளின் பசியமர்த்தி, வசிப்பதற்கு ஓர் இடம் தேடி என எளிய கனவுகளை சுமந்து கொண்டு, கடலிலும், காட்டிலும் பாதி உயிர்களை, உறவுகளை இழந்து, தீவில் இறங்கிய மக்களிடம் உயிர் சுண்டும் அளவிற்கு உழைப்பைப் பறித்துக் கொண்டு, அவர்களை சக்கையாய் திருப்பி அனுப்பத் தொடங்கினர் சிங்கள நாட்டின் தலைவர்கள். நடப்பதை நம்ப முடியாமல் திக்கித்து செயலிழந்தனர் மக்கள். 1974களில் தலைமன்னாருக்கு மலையக மக்களை கொண்டு வந்து சேர்த்த ரயில் பெட்டிகள் “அழுகைப் பூக்கள்’ என்று அழைக்கப்பட்டதாக விவரிக்கிறது “பச்சை ரத்தம்’ படம்.

சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை முன்வைத்தபோது, மலையக மக்களை இக்கட்டிலிருந்து காப்பாற்ற முடியாமல் தடுத்தது, தமிழ் தலைவர்களின் பிழைப்புவாதம். மலையக மக்களின் குடியுரிமை மறுக்கப்பட்டபோதும், வாக்குரிமை பறிக்கப்பட்டபோதும் வீரிய குரலெழுப்பாத தொண்டைமான், ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் சட்டப் பேரவையில் பெயருக்காக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அது பிரச்சனையில் வெந்து கொண்டிருந்த மக்களுக்கு முணுமுணுப்பாகக்கூட கேட்கவில்லை. மறுபுறமோ தொப்புள் கொடி உறவுகள் என்று சொந்தம் கொண்டாடும் ஈழத் தமிழர்கள்கூட, மலையக மக்களுக்கு ஆதர வுக்கரம் நீட்டவில்லை. மலையக மக்களுக்காக குரல் கொடுத்த பொதுவுடைமைக் கட்சி, நாளடைவில் சிங்கள வெறியின் கோர முகத்திற்கு முன்பு கூலிகேட்டும், உரிமைக் குரல் எழுப்பியும் குரலை அடக்கிக் கொண்டது.

இத்தகைய காயங்களை சுமந்து கொண்டு, இலங்கையிலிருந்து நிராதரவாகத் திரும்பிய தோட்டத் தொழிலாளர்களை ஆரத்தழுவி ஆதரித்திருக்க வேண்டும்தானே தமிழக அரசு? ஆனால் நிலைமை அப்படியிருக்கவில்லை. ஏற்கனவே பழக்கப்பட்ட தொழில் ஆதலால், வால்பாறை, தேனி, மேகமலை, மூணாறு, மாஞ்சோலை என தேயிலைத் தோட்டங்களை காட்டிவிட்டு தன் பணிக்குத் திரும்பின அரசு எந்திரங்கள். இலங்கையில் முள்வேலியிடப்பட்ட முகாம்களில், சேரிகளில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு, தமிழகத்தில் மாட்டுக் கொட்டகை யும், மண் வீடும் காத்திருந்தன. எதிர்த்து குரல் உயர்த்தினால், எட்டி உதைக்க ஆயிரம் கால்கள் நீண்டன. அன்று அடங்கிய குரல் இன்று வரை மலை முகடுகளுக்குள்ளாகவே எதிரொலித்து அடங்கி விடுகிறது. இதில் அரசு தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் நிலைமை, சற்றுத் தாழ்வில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

மற்ற தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கூலி உயர்வு இல்லை. பணிப் பாதுகாப்பு இல்லை. மாதக் கணக்கில் சம்பளம் கிடையாது. ஊசியாக இறங்கும் குளிரிலிருந்து தப்பிக்க குறைந்தபட்ச உடையோ, அட்டைக் கடிகளிலிருந்து தப்பிக்க காலணிகளோ இம்மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. வலிகளெல்லாம் இம்மக்கள்தம் இயல்பாக மாறிப்போனதுதான் மிச்சம். போதாத குறைக்கு ஒவ்வோர் ஆண்டும் வன விலங்குகளின் தாக்குதலுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பலியாகினர். வாழ்க்கையின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒதுங்க இடம் கிடைக்காத அவல நிலைக்கு தள்ளப்பட்டது, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு என அலைக்கழிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், வாழ்க்கையில் பெரும்பாடுகளை இருமுறை அனுபவித்தவர்கள் என்றுதான் கூற வேண்டும். ஆக, மனித இருப்பின் அடிப்படை இரண்டு நூற்றாண்டுகளாகியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என நெக்குருகிச் சொல்கிறது, “பச்சை ரத்தம்’ ஆவணப்படம்.

எண்ணற்ற பேட்டிகள், வலிமையான வசனங்கள், தொழிலாளர்களின் சோகத்தோடு பயணிக்கும் பின்னணி இசை ஆகியவை “பச்சை ரத்தம்’ படத்திற்கு வலு சேர்க்கின்றன. பொருந்தாத பின்னணிக் குரல், கூர்மையற்ற படத் தொகுப்பு என ஆவணப்படம் முழுக்க வறட்சி தென்பட்டாலும், தான் எடுத்துக் கொண்ட கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உண்மையான உழைப்பை கொட்டி யிருக்கிறார், ஆவணப்படத்தின் இயக்குநர் தவமுதல்வன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை ஒரு பாடமாகப் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த “பச்சை ரத்தம்’!

————————————————————————————————————–

பச்சை ரத்தம் ஒரு பச்சையான வரலாறு.
ஆவணப்படம்.
தம்பி மில்லர்
காலையில் உங்கள் தேனீர் கோப்பையை தொடும் போது ஏதாவது ணர்வுகள் எழும்புமா? தேனீரைப்பருகியபின் கிடைக்கும் புத்துணர்ச்சியில் ஏதேனும் ரத்தவாடை இதுவரையில் அடித்திருக்கிறதா?
தவமுதல்வன் எழுதி இயக்கிய ‘பச்சை ரத்தம்’ஆவணப்படம் ஒரு புதிய வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.
இந்த ஆவணப்படம் ஒரு பாட்டாளி வர்க்கத்தின் 200 ஆண்டுகாலப் போராட்டத்தை மீளாய்வு செய்கிறது.வியபாரத்திற்காக இந்தியாவுக்குள் வந்த பரங்கியர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தியபின், பல்வேறு காலனிய நாடுகளுக்கு பணியாற்ற அடிமைகளாககொண்டுசெல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் தென்னிந்தியாவில் இருந்த ஒடுக்கப்பட்ட இனமக்கள்தான்.
பெரும்பாலும் இலங்கைக்கு தேயிலை தோட்டங்களில் பண்ணை வேலை
செய்ய கொண்டுசெல்லப்பட்ட இந்த விசுவாசமிக்க அடிமைகளின் வாழ்வு 200
ஆண்டுகள் ஆகியும் அதே அவல நிலையிலேயே நிற்கிறது என்பதை இந்த
“பச்சை ரத்தம்” நெற்றியில் அடித்துச் சொல்கிறது. ஒரு நூற்றாண்டு முன் கொத்தடிமைகளாக நாடு கடத்தப்பட்டவர்கள், தாயகம் திரும்பியும் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள் என்பது இந்த படத்தைப் பார்த்தால் புரியும். 1840களில் தொடங்கிய வாழ்வுரிமைப் போராட்டம் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நாடு திரும்பிய 1970களிலும் தொடர்ந்தது. வந்தேறிகள்தான் வாழ்வளிக்கவில்லை என்றால், சொந்த நாடும் புறக்கணித்தது. ஒரு நூறாண்டாக இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்கள் 1950ஆம் ஆண்டில் ஒரே நாளில் நாடற்றுப் போனதால் ஏற்பட்ட விளைவுகளின் கதை இது. காடாய்க் கிடந்த இலங்கையை பொன்விளையும் பூமியாய் தங்கள் பச்சை ரத்தத்தால் பண்படுத்திய தமிழ் மக்கள் 1964-இல் ஏற்பட்ட ஒரு உதவாக்கரை ஒப்பந்தத்தால் விலங்குகளாய் பங்கிடப்பட்டு இந்தியா திரும்பிய கதையையும் சொல்கிறது இப்படம்.இந்தியா திரும்பிய மக்கள் வேறெந்த தொழிலையும் அறியாதவர்கள் என்பதால், நீலகிரி தேயிலைத்தோட்டங்களில் குடியமர்த்தப்படுகின்றனர். சரி சொந்த நாடாவது வாழ்வளித்ததா என்றால் அதுவும் இல்லை.தனியார் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சமடைந்த
அவர்கள் வாழ்க்கை இன்னும் கேள்விக்குறியாகவே நிற்கிறது. இங்கும் சுரண்டப்படும் அடிமைகளாகவே ஆகிப்போயினர். ஒடுக்கப்பட்ட மக்களாகப் பிறந்து தொலைத்ததனால் இன்றும் அவர்கள் நேர்மையான வாழ்வுக்கான
வாழ்வாதரங்களைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வசதிகளற்ற மலைப்பகுதியில் உயிருக்கோ உடமைக்கோ எந்த உத்தரவாதமும் இல்லாமல் வாழ்க்கையைத்தொடர்கின்றனர்.யானைகளுக்கு உயிரையும். அட்டைப் பூச்சிகளுக்கு ரத்தத்தையும், பெருந்தோட்டப் பெருமுதலாளிகளுக்கு
இரண்டையும் கொடுத்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களின்வாழ்க்கையை உருகிச் சொல்கிறது ‘பச்சை ரத்தம்’. பாடுகளை அனுபவித்து வரும் மக்களின்
பேட்டிகள், இலங்கையில் பணி செய்வதற்கும் இங்கு செய்வதற்குமான வேறுபாடுகள், ஒதுக்கப் படுவதற்கான காரணங்களை அவர்கள் புரிந்துகொண்ட விதம், ஆதங்கங்கள், ஏக்கங்கள், சிந்த வேண்டாத கண்ணீர் என படம்முழுவதும் உணர்ச்சிக் குவியல்களாக இருக்கிறது. வர்த்தக நோக்கங்களின்றி வாழ்வியல் பதிவுகளை இன்னும் அதிகம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் ‘பச்சை ரத்தம்’ அழுத்தமாகப்பதிவு செய்கிறது. ஒரு தவிர்க்க முடியாதவரலாற்றுப் பதிவை மேற்கொண்ட தவமுதல்வன் பெரும்பணி ஆற்றியிருக்கிறார்.
குறுந்தகடு பெற: தவமுதல்வன் –
9865880160

One response

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s